திருச்சியில் கடந்த சில தினங்களாகக் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்தத் திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
அப்போது, ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் மழையில் நனைந்தபடி நின்ற கோவில் யானை ஆண்டாள், மகிழ்ச்சியில் தன் தும்பிக்கையால் தண்ணீரை வாரி இறைத்து, உற்சாகமாக ஆனந்தக் குளியல் போட்டது.
