தெலங்கானாவைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணியான யூடியூபர் வைஷ்ணவியை, நடத்தையில் சந்தேகமடைந்து அவரது கணவர் ஹரிபாபு கடந்த மார்ச் மாதம் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இவ்வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ஹரிபாபுவை, தங்கையின் மரணத்திற்குப் பழிவாங்க நினைத்த வைஷ்ணவியின் அண்ணன் சந்தோஷ் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர் இக்கொலையைத் தானே செய்ததாக ஒப்புக்கொண்டு போலீஸ் ஸ்டேசனில் சந்தோஷ் சரண் அடைந்தார்.
