Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிவகங்கை-மதுரை சாலையில் லாரி விபத்து… கொட்டிய டீசல்…பரபரப்பு

சிவகங்கை-மதுரை சாலையில் லாரி விபத்து-கொட்டிய டீசல்-பரபரப்பு

சிவகங்கை மாவட்டம், ஏனாதி அருகே சிவகங்கை – மதுரை சாலையில் இன்று காலை பொட்டாசியம் குளோரைடு ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானது.

காரைக்காலில் இருந்து பொட்டாசியம் குளோரைடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, சிவகங்கை – மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஏனாதி பகுதியில் வளைவில் திரும்ப முயன்றது. அப்போது, சாலையின் சென்டர் மீடியன் தடுப்புச் சுவரில் எதிர்பாராதவிதமாக மோதியா லாரி விபத்துக்குள்ளானது.

விபத்தில் லாரியின் டீசல் டேங்க் உடைந்ததால், அதிலிருந்த டீசல் முழுவதும் சாலையில் கொட்டியது. இதனால் சாலையில் டீசல் பரவி, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுக்குறித்து தகவல் அறிந்த சிவகங்கை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். சாலையில் கொட்டிய டீசலால் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில், நுரையைப் பயன்படுத்தியும் தண்ணீரைப் பீய்ச்சியும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்து காரணமாக சிவகங்கை – மதுரை சாலையில் ஏனாதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. வேறு எந்த உயிரிழப்பும், பெரிய பாதிப்பும் ஏற்படாமல் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

error: Content is protected !!