திருச்சியில் நேற்று இரவு கனமழை கொட்டிதீர்த்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு நேற்று இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்களும் உற்சாகமடைந்தனர். நேற்று திருச்சி மாவட்டத்தில் அதிக மழை பதிவான இடங்கள்:
- புள்ளம்பாடி – 82.2 மி.மீ.
- கல்லக்குடி – 70.4 மி.மீ.
இரண்டுமே கனமழை பிரிவில் பதிவாகியுள்ளன. திருச்சி நகருக்கான IMD பதிவில் 60 மி.மீ. கனமழை பெய்துள்ளது.
