பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங் (50) சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த ஹர்ஜித் சிங்கை சக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
