தூத்துக்குடி அருகே தருவைக்குளம் பகுதியில் பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்கிய வழக்கில், கணவர் உள்பட 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவர் முருகன், அவரது சகோதரர் சண்முகசுந்தரராஜ் மற்றும் மாமியார் பூச்சம்மாள் ஆகியோர், குறியீஸ்வரி (35) மீது சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறி அவரை வீட்டுக்குள் அடைத்து தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மனைவியை தாக்கிய கணவர்… சிறையில் அடைப்பு
