ஜம்முவின் லோயர் ரூப் நகர் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். நீரஜ் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியபோது, நண்பரான சமீர் அவரது முகத்தில் கேக் பூசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நீரஜ், சமீரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த சமீரை நண்பர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
