காமராஜர் காலை உணவுத் திட்டம் வரும் 22-ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் கூடுதலாக 15.30 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு, மொத்தம் 34.64 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். மாணவர்களுக்குச் சுவையான உணவு தர முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், புதிய மெனுவை பரிந்துரைக்கக் குழு அமைக்கப்படும் என்றார். மேலும் மலைப்பகுதி மாணவர்களுக்குச் சூடான உணவு மற்றும் எதிர்காலத்தில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் கூறினார்.
