திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ள நிலையில் மம்தா பானர்ஜி பிரிவுக்கு ‘கால்பந்து வீரர்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ என மம்தா தரப்பு கட்சிக்கு புதிய பெயரை ஆணையம் அங்கீகரித்துள்ளது. ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ என அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு புதிய பெயரை ஆணையம் அங்கீகரித்துள்ளது. ரிதப்பிரதா பிரிவு திரிணமூல் காங்கிரஸுக்கு அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
