Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரதமர் மோடியை கண்டித்து புதுகையில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்….

புதுக்கோட்டை மாவட்டம்,  அரிமளத்தில் வங்கிகள் எல்ஐசி. நிறுவனங்களின் முதலீடுகளை அம்பானி குழுமத்திற்கு அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய பிஜேபி மோடி அரசைக்கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு நடைபெற்றது.   ஒன்றிய அரசின் எல்ஐசி. நிறுவனங்களின் முதலீடுகளை அம்பானி குழுமத்திற்கு அள்ளிக்கொடுக்கும் செயலை கண்டித்து நடைபெற்ற

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம் தலைமை தாங்கினார். அர்ஜுணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.கணேசன், பாலாஜி முகமது இப்ராகிம் உள்ளிட்ட காங்கிரஸார் பங்கேற்று ஒன்றிய அரசிற்கு எதிராக கோஷங்களை எலுப்பினர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!