சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 19-ந் தேதி முதல் ஜனவரி 21-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06117) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 20-ந் தேதி முதல் ஜனவரி 22-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06118) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. 22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது.
இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 21-ந் தேதி முதல் ஜனவரி 23-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06121) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து நவம்பர் 22-ந் தேதி முதல் ஜனவரி 24-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06122) மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது. 22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது.
மேலும், சென்னை சென்டிரலில் இருந்து நவம்பர் 18-ந் தேதி முதல் ஜனவரி 20-ந் தேதி வரை புதன்கிழமைகளில் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06119) மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 19-ந் தேதி முதல் ஜனவரி 21-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06120) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது. 18 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே சிறப்பான பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பயணிகளின் வசதிக்காக மொத்தம் 132 தீபாவளி சிறப்பு ரயில்கள் (207 ட்ரிப்) இயக்கப்பட்டுள்ளன. 22 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வெயிட்டிங் லிஸ்ட் (WL) பயணிகளுக்காக 8 முன்பதிவில்லா மெமு (MEMU) சிறப்பு ரயில்கள் களமிறக்கப்பட்டுள்ளன. சென்னை – மதுரை, நெல்லை, குமரி, ராமேஸ்வரம், கோவை, திருவனந்தபுரம், மும்பை மற்றும் பெங்களூரு முக்கிய வழித்தடங்கள்.
சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் வழக்கமான 300 RPF போலீசாருடன், கூடுதலாக 180 RPF, 158 GRP, 25 ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் 30 NSS தன்னார்வலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் களமிறக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய் படை மற்றும் CCTV கட்டுப்பாட்டு அறைகள் மூலம் முக்கிய நிலையங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.
முன்பதிவில்லா பெட்டிகளில் (General) இருந்து முன்பதிவு செய்த பெட்டிகளுக்குள் (Reserved) பயணிகள் மாறுவதைத் தடுக்க, ரயிலின் இணைப்புக் கதவுகள் (Vestibules) பிளாட்பாரத்திலேயே மூடப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் பாலக்காடு நிலையங்களில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட தூர ரயில்களில் பெண்களின் பாதுகாப்பிற்காகச் சிறப்புப் போலீஸ் பாதுகாப்பும், நிலையங்களில் சிறப்பு உதவி மையங்களும் (Help Desks) அமைக்கப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
