தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசியை முன்னிட்டு தங்க கவச அலங்காரம், பக்தர்கள் சுவாமி தரிசனம்
தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவதானத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது, இக்கோவிலில் புரட்டாசி மாத முதல்

சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் சுவாமிக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது, இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு மனமுருக வேண்டி கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
