கோவை ராமநாதபுரத்தில் பூட்டியிருந்த ஐ.டி. ஊழியர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர் திருட முயன்றுள்ளார். ஆனால் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாத விரக்தியில் சோபா, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார். பின் சுவரில் ஆங்கிலத்தில் ‘சாரி’ என எழுதிவிட்டுத் தப்பித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டின் பொருட்களை உடைத்து நொறுக்கி ‘சாரி’ எழுதிச் சென்ற திருடன்!
