Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அக்டோபர் 3ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

அக்டோபர் 3ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

அக்டோபர் 3ம் தேதி மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை தனித் தொகுதியாக இருக்கிறது. 1952 முதல் தேர்தல்களை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் அதிமுகவிற்கு சாதகமான தொகுதியாக காணப்படுகிறது. கடைசியாக நடந்த 2021, 2026 ஆகிய தேர்தல்களில் அதிமுகவின் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். எனவே மூன்றாவது முறை வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி கொண்டிருக்கிறார்.

இந்த தொகுதியில் வன்னியர்கள், பட்டியல் சமூகத்தினர் அதிகமாக உள்ளதால் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றனர். இதுதவிர முதலியார், ரெட்டியார் சமூகத்தினரும் பரவலாக உள்ளனர். விவசாயத்தை பெரிதும் நம்பி வசித்து வருகின்றனர். இதுதவிர தொழிற்சாலைகளும் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஏழை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என பலமுனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் ஏற்கெனவே அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!