கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. எல்லை கடந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாக்குதலில் 3 பேர் மட்டுமே உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையே இந்த எல்லை மோதல் நடைபெற்று வருகிறது.
