அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் புளோரிடாவில் நடைபெறவுள்ள ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி வரும் டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
