வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
