திருச்சி ரெயில்வே இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ பச்சேரா
உத்தரவுப்படி நேற்று சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், முதல் நிலைக் காவலர் கண்ணதாசன், மற்றும் காவலர் ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர்
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து நிஜாமுதீன் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் வண்டியில் , திருச்சி நடைமேடை எண் 4 ல் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா, போன்ற போதைப் பொருட்களை சோதனை செய்ததில் முன்புறம் உள்ள பொது பெட்டியில் இருக்கைக்குக் அடியில் கேட்பாரற்று கிடந்த 1 சாக்கு பையை,(12 கிலோ குட்கா) மற்றும் ஒரு சோல்டர் பேக்கில் 04 கிலோ உலர் கஞ்சா,பின்புற பொதுப்பெட்டியின் இருக்கைக்கு கீழ் 1 சோல்டர் பேக்(14 கிலோ குட்கா ) இருந்ததை சோதனை செய்வதில் குட்கா மற்றும் உலர் கஞ்சா இருந்தன. இவற்றின் மொத்த எடை 26கிலோ100 கிராம் குட்கா கஞ்சா இருந்தது
இதனை கடத்தி வந்த மர்ம ஆசாமி யார் என்று தெரியவில்லை அவற்றை பறிமுதல் செய்து நிலையம் வந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சார்பு ஆய்வாளர். கவிதா விசாரணை செய்து என்ஐபி சிஐடி யிடம் வசம் ஒப்படைக்க உள்ளார்.
