திருவெறும்பூர் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 100 கிலோ குட்கா பான் மசாலா மற்றும் கள்ள சந்தையில் மதுபானம் 100 விற்க வைத்திருந்தவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பிரேமானந்த் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அண்ணா வளைவு அருகே வாகனதணிக்கையில் ஈடுபட்ட பொழுது இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் படியாக வந்த நபரை மரித்து சோதனை இட்ட பொழுது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூலிப், விமல் பாக்கு, வி1 பாக்கு என 50 கிலோ 420 கிராம்இருப்பது தெரியவந்தது அதன் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரித்த பொழுது புதுக்கோட்டை குளத்தூர் தாலுக்கா சோண்டாம்பட்டியை சேர்ந்த ரத்தின மகன் போசாங்கு (30) என்பது தெரியவந்தது மேலும் அவனிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா அவை கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் ஐபோன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கக்கன் காலனி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்பனைக்காக வைத்திருந்த மாரிமுத்து ( 65 ) என்பவரை கைது செய்ததோடு அவரிடமிருந்து சுமார் ஆயிரத்து900 ரூபாய் மதிப்புள்ள குட்கா பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல் மணிகண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்டபகுதியில் 50 கிலோ மதிப்பீல் குட்கா பான் மசாலா கடத்தி வந்தத நாகமங்கலத்தைச் சேர்ந்த ராயப்பன் ( 65 ) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மணிகண்டம் பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த புதுக்கோட்டை அறந்தாங்கி சித்திரை சேர்ந்த கார்த்திகேயன் மகன் தட்சிணாமூர்த்தி (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மணிகண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
