தேர்தல் ஆணையத்தின் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரே நபரின் கைகளில் குவிவது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சக தேர்தல் ஆணையர்களின் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் புறக்கணித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
