அமெரிக்காவின் டாட்சன்வில் பகுதியில் இந்திய வம்சாவளியினர் டேவ் ஃபிஜி மற்றும் ஜென்சியின் திருமண விழா நேற்று நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் ஹெலிகாப்டரில் புறப்பட்டபோது, மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டது. இதில் மணமகன் டேவ் ஃபிஜி மற்றும் ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்தனர். மணமகள் ஜென்சி, கணவரின் உடலுக்கு அடியில் 6 மணி நேரம் சிக்கி உயிருக்குப் போராடி மீட்கப்பட்டார். வானிலையை கவனிக்காமல் அலட்சியமாக ஹெலிகாப்டரை இயக்கியதாக நிறுவனம் மீது ஜென்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
