Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் தனுஷின் விமான நிலைய வரவேற்பு பயங்கரமாக இருக்கு… நடிகர் எஸ்.ஜே. சூர்யா

நடிகர் தனுஷின் விமான நிலைய வரவேற்பு பயங்கரமாக இருக்கு – சவுண்டு பயங்கரமா இருக்குது நடிகர் எஸ்.ஜே. சூர்யா மதுரை விமான நிலையத்தில் பேட்டி

தனுஷ் பட பூஜை: மதுரை விமான நிலையம் வந்த எஸ்.ஜே.சூர்யா

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் பட பூஜை நாளை சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாநாடு கருப்பசாமி கோவிலில் நடைபெற உள்ளது.

இந்த பட பூஜையில் பங்கேற்பதற்காக நடிகர் எஸ்.ஜே.சூர்யா இன்று மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருந்து, முதல்வராகி 120 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அவரது செயல்பாடு எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, “சந்தோஷம் தானே… விஜய் நம்ம நண்பர்” என தெரிவித்தார்.

நடிகர் தனுஷிடம் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா என கேள்வி எழுப்பியபோது, “பயங்கரமா இருக்கு, சவுண்ட் பயங்கரமா இருக்குது. அதான் நான் லேட்டா வந்தேன்” என தெரிவித்தார்.

தனுஷ் தேசிய விருது வாங்கிவிட்டு வந்திருப்பதாக குறிப்பிட்ட எஸ்.ஜே.சூர்யா, “தனுஷின் சின்சியாரிட்டி மற்றும் உழைப்பை எப்போதும் நான் ரசிப்பேன்” என தெரிவித்தார்.

தனுஷை பார்க்க வரும் கூட்டம் குறித்த கேள்விக்கு, “நல்ல விஷயம் தானே” என பதிலளித்தார்.

மேலும் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த எஸ்.ஜே.சூர்யா, “படத்தோட பூஜைக்கு வந்திருக்கிறேன்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

error: Content is protected !!