திருச்சி காந்தி மார்க்கெட்டில் லாட்டரி விற்ற முதியவர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியில் தமிழக அரசு செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 73) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
கஞ்சா விற்ற மூதாட்டி
அதிரடியாக கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லாங்குளம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த புங்கனூர் பகுதியைச் சேர்ந்த 64 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவரங்கத்தில்
மாமியார் வீட்டிற்கு சென்று தகராறு ;தாக்குதல்
வாலிபர் கைது –
திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 27.) இவருக்கும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இவர்களுக்குள் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அப்பெண் தனது தாய் வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி குணசேகரன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த தனது மனைவி மற்றும் மாமியாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த அவரது சகோதரரையும் தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த அந்த பெண்ணின் சகோதரர் சிகிச்சை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அந்த பெண் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர்.
திருச்சி முதலியார் சத்திரத்தில்
கூலித்தொழிலாளியிடம்
கத்தி முனையில் பணம் பறிப்பு
வாலிபர் கைது
திருச்சி செப்.25
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் நாவலடியான் (வயது 67) . இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லால்குடி வாளாடி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (31) என்பவர் அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இது குறித்து அவர் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார் அதன் பெயரில் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.
