Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டின் ஓட்டை பிரித்து மூதாட்டியிடம் 7.5 சவரன் நகை பறிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் கோமல் பாடகச்சேரி கிராமத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீட்டில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார். வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த அவர், தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை மிரட்டி, கழுத்தை நெறித்து அவரிடம் இருந்த 7.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!