தர்மபுரி ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கர்நாடகா, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த 12ஆம் தேதி முதல் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை 5 ஆயிரம் கனஅடியாக குறைந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் 13 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் 13 நாட்களுக்குப் பிறகு பரிசல் சவாரி மீண்டும் துவக்கம்
