மகா மக திருவிழா தொடர்பான முக்கிய சிவாலயங்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் மகாமக குளத்தை ஒட்டி உள்ள 16 சோடச மகாலிங்க சுவாமி ஆலயங்களுக்கு இன்று திருப்பணி துவங்கியது . மூன்று கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்ய திட்டம்.
தமிழகத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றான மகாமக பெருவிழா கும்பகோணம் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது.
இவ்விழாவில் ஒரு கோடி நபர்களுக்கு மேல் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
மகாமக குளக்கரையில் அமைந்துள்ள இந்த ஆலய மற்றும் மகாமக குளத்தைச் சுற்றி உள்ள 16

சோடச மகாலிங்க சுவாமி ஆலயங்களுக்கு திருப்பணி செய்ய 3 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
அடுத்த ஓராண்டுக்குள் திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .
இவ் ஆலயத்தில் இன்று திருப்பணி துவங்கியதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
