சீனாவில் முழு ரயிலையே கப்பலில் ஏற்றி கடல் வழியாக கொண்டு செல்லும் வியக்க வைக்கும் நடைமுறை 22 ஆண்டுகளாக தொடர்கிறது. கியோங்ஜோ ஜலசந்தியில் பாலம் அமைப்பது சிரமம் என்பதால், ‘யூஹாய் ரயில் கப்பல்’ மூலம் ரயில் இயக்கப்படுகிறது. துறைமுகம் வந்ததும் ரயில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லோகோமோட்டிவ் மூலம் கப்பலுக்குள் இழுத்துச் செல்லப்படுகிறது. சக்கரங்கள் சங்கிலிகளால் பாதுகாப்பாக கட்டப்பட்டு, சுமார் ஒரு மணி நேரத்தில் ஜலசந்தி கடக்கப்படுகிறது. மறுகரையில் மீண்டும் ரயில் இணைக்கப்பட்டு பயணம் தொடர்கிறது.
ரயிலையே கப்பலில் ஏற்றும் சீனாவின் அசத்தல் தொழில்நுட்பம்!
