தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் சத்யாநகரை சேர்ந்தவர் முருகேசன் (64). இவர் கடந்த 2016-ம் ஆண்டு மூலைக்கரைப்பட்டியில் போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். 2016 செப்டம்பர் 8-ந் தேதி பைக்கில் மெஞ்ஞானபுரம்-நாசரேத் சாலையில் சென்றபோது, அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், முருகேசனுக்கு ரூ.1.78 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் படுகாயம்.. போலீஸ் ஏட்டுக்கு ரூ.1.78 லட்சம் இழப்பீடு
