Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“நேர்மையான விஜயகாந்திற்கு மக்கள் வாய்ப்பு தரவில்லை!” – பிரேமலதா உருக்கம்!

"நேர்மையான விஜயகாந்திற்கு மக்கள் வாய்ப்பு தரவில்லை!"

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா நேற்று கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் அளித்த பேட்டி:

லஞ்சம் இல்லாத ஆட்சி என்கின்றனர். ஆனால் மறைமுகமாக பல்வேறு பிரச்னைகள் உள்ளன. ‘லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி வேண்டும்’ என கூறி மக்களுக்காக வாழ்ந்தவர் மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த். ஆனால், அவருக்கு மக்கள் வாய்ப்பு தரவில்லை. ஏமாற்றுபவர், பொய் பேசுபவர், நடிப்பவர்களுக்குத்தான் ஓட்டு போடு கின்றனர்.

என் தொகுதியில், கடந்த மூன்று மாதத்தில் மட்டும், ஒரு லட்சம் மனுக்களை வாங்கி இருக்கிறேன். மக்களுக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு ஆதரவு தராமல், யாருக்கோ ஓட்டை மாற்றி போட்டு விட்டு, ‘குத்துது, குடையுது’ என்றால் என்ன செய்ய முடியும்? ‘ரீல்ஸ், போட்டோ ஷூட்’ பண்ணுபவர்களை தான் மக்கள் நம்புகின்றனர். குழந்தைகள், பேர குழந்தைகள் சொன்னார்கள் என ஓட்டை மாற்றிப் போட்டனர். இன்று அவர்கள் துணையாக வந்து நிற்பரா? நான் யாரையும் குறை சொல்லவில்லை. மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!