வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிகமாகவே இருக்கும் என்றும், கடந்த கால அனுபவங்கள், தரவுகள் அடிப்படையில் மக்கள் பாதிக்காத அளவிற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம் என்றும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள ளார்.
வடகிழக்கு பருவ மழையை ஒட்டி, சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் முகத்துவார பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன் தீப் சிங் பேடி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதை அடுத்து,
செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப்சிங் பேடி,
கூவம் ஆற்று முகத்துவாரம், அவ்வப்போது மண்மேடு அடைப்பு ஏற்படும். 42 கோடி ரூபாய் செலவில் முகத்துவாரம் அடைப்பு தூர் வாரும் பணிகள் நடந்து வருகின்றன. வடசென்னை பகுதியிலும் பணிகள் நடக்கின்றன. பக்கிங்காம், கூவம், ஓட்டேரி கால்வாய், வளசரவாக்கம் கால்வாய் என அனைத்து இடங்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர், டிசம்பர் மாதம் வரை இல்லாமல், தொடர்ந்து ஜனவரி மாதம் வரை இந்த பணிகள் நடைபெறும்.
சென்னைக்கு மட்டும் 7 அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளையும் சேர்த்துதான், அவர்கள் கருத்துக்களை கேட்டு தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
29ம் தேதி த.செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலும் சென்னையில் முடிவடைந்துவிட்டது. முடிந்த பணிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளை அறிவுறுத்தி்உள்ளோம். ஆற்காடு சாலையில் பணிகள் வேகமாக நடக்கின்றன. ஒக்கியம் மடுவு பகுதியில் மெட்ரோ, நெடுஞ்சாலை, நீர்வளத்துறை சார்ந்து பணிகள் நடக்கின்றன. கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்திலும் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இயந்தி்ங்கள் அங்கேயே நிறுத்தி வைத்து தொடர்ந்து தூர்வாரும் பணி நடக்கும். அனைத்து இடங்களிலுல் இப்படி நடக்கும். தொடர்ந்து பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். கடந்த கால அனுபவங்கள், புள்ளி விவரங்களை அடிப்படையாக கொண்டு பணிகளை செய்து வருகிறோம். வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எல் நினோ குழுவின் பரிந்துரைகளையும் அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு சிறப்பான பணிகளை செய்வோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு நடவடிக்கைகள் இருக்கும்.
