Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் உலக இருதய தினம்… 5 கி.மீ விழிப்புணர்வு வாக்கத்தான்

கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு 5 கி.மீ விழிப்புணர்வு வாக்கத்தான் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கரூரில் உலக இதய தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கரூர் அப்போலோ தனியார் மருத்துவமனை சார்பில் 5 கிலோமீட்டர் தூர வாக்கத்தான் (நடைப்பயண) போட்டியை மாநகர் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய வாக்கத்தான் ஈஸ்வரன் கோவில், திண்ணப்பா தியேட்டர், திருக்காம்புலியூர், வையாபுரி நகர், பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா வழியாக மீண்டும் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்ட தெரிவித்தனர்.

குறிப்பாக இன்று நடைபெற்ற வாக்கத்தான் போட்டியில் குழந்தையை தந்தை ஒருவர் தோளில் சுமந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது ‌.

ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இன்று நடைபெற்றது. இந்த வாக்கத்தான் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இதய நோய்களைத் தடுப்பதில் தினசரி நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

error: Content is protected !!