Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொலை வழக்கில் ஈடுபட்ட வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்…

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திருத்துவனாதன் என்பவர் மகன் சார்லஸ் (34) என்பவரை செட்டிபாளையம் காவல் ஆய்வாளர் அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கீற்கும் பாதகமாக செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சார்லஸ் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர்  கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கொள்ளை வழக்கு குற்றவாளியான சார்லஸ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
‌இந்த வருடத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் 13 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!