ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் இறுதிப் போட்டியில் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தற்போது 39 ஆக உயர்ந்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது இந்திய விளையாட்டு வரலாற்றுக்கு மேலும் பெருமை சேர்த்து உள்ளது. துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தொடர்ந்து பதக்கங்களை அள்ளி வரும் இந்திய அணி, வரும் நாட்களில் மேலும் பல தங்க மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
