தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை ஒன்றியத்தில்
குமிழக்குடி, திருக்கருகாவூர், பூண்டி, நல்ல வன்னியன் குடிக்காடு, ராராமுத்திரை கோட்டை, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் பேருந்து நிறுத்தம், கூட்டுறவு அங்காடி கட்டிடம்,

அங்கன்வாடி மைய கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலகம்,சாலை வசதிகள் ஆகிய திட்ட பணிகள் நிறைவேற்றுவது குறித்து நேரில் சென்று இடத்தினை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி

சரியில்லாத ஒரு ஆட்சியாகவும், அதனை சிறப்புமிக்க ஆட்சியாக அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றும், ஊழல் இல்லாத ஆட்சியை நடத்திட வேண்டும் என்றும் மிகத் தெளிவாக அறிவித்து தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடைபெற இருக்கக்கூடிய மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் சார்பில் மதுராந்தகத்தில் போட்டியிடக் கூடிய மரகதம் குமரவேல், தாராபுரத்தில் போட்டியிடுகின்ற சத்தியபாமா, அவர்களை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் குழுக்கள் அமைத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரண்டு தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்காக சென்று வந்த நான் பொதுமக்களை சந்திக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்,
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி என்ற நம்பிக்கையிலே மக்கள் அரசு மீது பேரன்பு கொண்டிருக்கிறார்கள் அந்த வகையிலே இரண்டு வேட்பாளர்களும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெறுவார்கள்
என்று தெரிவித்தார்.
பேட்டியின்போது … இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் ஜமால் முகமது இப்ராஹிம், தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர் சரிப், தஞ்சை மாவட்ட செயலாளர் ராஜாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.
