புதுச்சேரி கடற்கரையில் துருப்பிடித்த அலங்கார மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தஸ்லீம்-ரிகானா தம்பதியின் மகன் பைசல், தனது தம்பியுடன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. மின்கம்பம் சிறுவனின் மார்பில் விழுந்ததில் படுகாயமடைந்த அவர், அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகடை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
துருப்பிடித்த அலங்கார மின்கம்பம் சரிந்து சிறுவன் பலி
