திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் குடும்ப விழா அதன் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் மூர்த்தி,பொருளாளர் சபி அகமது,கூடுதல் செயலாளர் மந்தை ஜெகன்,துணைப் பொருளாளர் சுதாகர் மற்றும் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் எதிரே, புதிய மார்க்கெட் அமைக்கும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் காந்தி மார்க்கெட்டை அதே இடத்தில் நிரந்தரமாக இயங்க வழிவகை செய்ய வேண்டும் மொத்த வியாபாரத்திற்கு காந்தி மார்க்கெட் அருகில் உள்ள இடங்களை தேர்ந்தெடுத்து விரிவாக்கம் செய்து தர வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த தீர்மானங்கள் பொதுக்குழுவில் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் மூலம் கோரிக்கை மனுவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,அந்த கடிதத்தில்,திருச்சி மாநகரின் வர்த்தக இதய பகுதியாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க காந்தி மார்க்கெட்டை நம்பி வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான காய்கறி மளிகை உள்ளிட்ட அனைத்து தரப்பு சில்லறை வியாபாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்த ஊழியர்கள் தொழிலாளர்கள் தினக்கூலிகள் மற்றும் மார்க்கெட்டுக்குள் இயங்கும் தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி இந்த மனுவை தங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
திருச்சி காந்தி மார்க்கெட் என்பது வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் வியர்வை ரத்தமும் கலந்த ஒன்றான காந்தி மார்க்கெட்டை மாற்ற நினைத்தாலோ அல்லது மாற்று திட்டம் போட்டாலும் ஆட்சி நிலைக்காது என்பதற்கு கடந்த கால தேர்தல்களே சாட்சியாகும் எனவே முதலமைச்சர் விஜய் இதில் தனி கவனம் செலுத்தி பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் திட்டத்தை ரத்து செய்து காந்தி மார்க்கெட்டை இதே இடத்தில் தொடர்ந்து நடத்தவும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் திருச்சி கிழக்கு தொகுதி என்பது தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வென்ற தொகுதி என்பதை நாங்கள் தங்களுக்கு நினைவூட்ட வேண்டியதில்லை தமிழக வெற்றிக்கழகம் மீண்டும் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி வாகை சூட இச்சமூகப் பிரச்சனைக்கு தமிழக முதலமைச்சர் முழு கவனம் செலுத்தி உரிய தீர்வு காண வேண்டும் இல்லை என்றால் வியாபாரிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்
