அரியலூர் அருகே துக்க நிகழ்ச்சிக்காக சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒட்டக்கோவில், சாலைக்குறிச்சி இடையே சென்ற பயணிகள் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
அரியலூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாகனம் விபத்து.. 20 பேர் காயம்
