Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த சேலம் கோட்ட பொது மேலாளர்..

சேலம் கோட்ட பொது மேலாளராக பங்கஜ் குமார் சின்ஹா கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதிதாக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து கரூர் ரயில் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறப்பு ரயில் மூலம் அதிகாரிகளுடன் வந்த அவர் ரயில் நிலைய நடை மேடை, இரு சக்கர வாகன நிறுத்தம், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய அரசின் 75 குடியரசு தினத்தை முன்னிட்டு அம்ரித் பாரத் திட்டத்தின்

கீழ் 1000 ரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகளை மேம்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் கரூர் ரயில் நிலையமும் ஒன்று என்பதால் ரயில் நிலையத்தை மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!