Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் மின்கசிவால் வீடு தீப்பற்றி பொருட்கள் சேதம்-பரபரப்பு

செந்துறை அரசு மருத்துவமனை அருகே வீட்டில் மின்கசிவு… தீப்பிடித்து எரிந்ததில் மின்னணு பொருட்கள் நாசம்… வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை அருகே வசித்து வருபவர் ரகுமான். இவர் தகர ஷீட் வேய்ந்த வீட்டில் வசித்துள்ளார். ரகுமான் குடும்ப சூழல் காரணமாக அரியலூரில்

தற்காலிகமாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ரகுமானின் செந்துறை வீட்டிலிருந்த பிரிட்ஜ்க்கு வரும் மின் வயரில் இன்று காலை திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. மெல்ல பற்றிய தீ வீடு முழுவதும் பரவியுள்ளது.

வீட்டிற்கு அருகிலேயே அரசு மருத்துவமனை இருந்ததால் கூடியிருந்த நோயாளிகள் இடையே

பரபரப்பு ஏற்பட்டது. வீடு தீப்பிடித்தது குறித்த தகவல் அறிந்த செந்துறை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் வீட்டில் இருந்த மின்னணு சாதன உபயோகப் பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து

நாசமாகின. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. தீ விபத்து குறித்து செந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனை அருகே ஏற்பட்ட தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!