சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம், நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர ஓட்டலாக மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாகத் திருமணம் மற்றும் அரசியல் நிகழ்வுகளின் அடையாளமாக விளங்கிய இந்த மண்டபத்தில், தங்கும் அறைகள், உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நட்சத்திர ஓட்டலாக மாறுகிறதா ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபம்?
