சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் இன்று போராட்டம் அறிவித்துள்ளனர். எண்ணூர் முதல் கோவளம் குப்பம் வரையிலான பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக பட்டினப்பாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
