திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பகுதியில் 2024-ல் இரண்டு சிறுமிகளிடம் ஆபாச செயலில் ஈடுபட்ட மாயாண்டிக்கு (45) போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.25,000 நிவாரணத் தொகையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் வனிதா, காவலர் முத்துகிளி, அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. பாராட்டியுள்ளார்.
சிறுமிகளிடம் ஆபாச செயல்; குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறை
