Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

4 மாதங்களாக வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை என குற்றச்சாட்டு

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் நே.பென்மணி, துணை மேயர் .ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், .பி. ஜெயா நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் , துணை ஆணையர், நகர பொறியாளர்,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்
கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் முன்னதாக,
இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில்
திமுக கவுன்சிலர்கள் கருப்பு ஆடை அணிந்து வந்திருந்தனர். அதேபோன்று
ஆண் கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து,
பெண் கவுன்சிலர்கள் கருப்பு சேலைகள் அணிந்தும் வந்திருந்தனர். பின்னர் சிறிது நேரம் விவாதத்தில் ஈடுபட்ட மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி,விஜயலட்சுமி

கண்ணன்,ஜெயநிர்மலா, திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம்,ராமதாஸ், கலைச்செல்வி லீலாவேலு கே.கே.கே.கார்த்திக்,சீதாலட்சுமி முருகானந்தம்,கமால் முஸ்தபா,புஷ்பராஜ் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக
வெளிநடப்பு செய்தனர்.திமுக கவுன்சிலர்களுடன் மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் பைஸ் அகமதுவும் வெளிநடப்பு செய்தார். பின்னர் திமுக கவுன்சிலர்கள் கூறும் போது, ஆட்சி மாற்றத்துக்கு பின் கடந்த 4 மாதங்களாக
மாநகராட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை.
குடிநீர் சாக்கடை போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. அதிகாரிகள் கவுன்சிலர்களை மதிப்பதில்லை. அமைச்சர் தன்னிச்சையாக ஆய்வு செய்கிறார்.


அடிப்படைத் தேவைகளுக்கு கூட கடந்த நான்கு மாதங்களாக எந்த நிதியும் வார்டுகளுக்கு ஒதுக்கப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.6 கோடி ரூபாய் நிதி அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த நிதி தேவை இல்லை என மாநகராட்சி நிர்வாகம் திருப்பி அனுப்பியது
இதனைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர்.

அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

இதற்கிடையே,
நான்கு மாதமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறி வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் மீண்டும் மாமன்ற கூட்டத்தில் பங்கேற்றத்தை
கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள்
மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு. அம்பிகாபதி தலைமையில் கவுன்சிலர்கள் அரவிந்தன், அனுசியா ஆகிய மூன்று பேரும் கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.

விசிகவும்
புறக்கணிப்பு

இதற்கிடையில் திருச்சி மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர்
ந.பிரபாகரன்,
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சட்ட மாமேதை அம்பேத்கர் சிலையை அகற்றியதை கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் சிலையை வைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியவாறு
சென்னை மாநகராட்சியை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
இதற்கிடையே வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள்
மீண்டும் வந்த அரங்கத்துக்குள் சென்று, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களை வைத்து பெரும்பான்மை இல்லாமல் எப்படி கூட்டத்தை நடத்துவீர்கள் கூட்டத்தை ஒத்தி வையுங்கள் என கூறினர். அதைத்தொடர்ந்து மேயர் அன்பழகன் தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை ஒத்தி வைத்தார்
இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது.கருப்பு உடையில் வந்து திமுக கவுன்சிலர்கள் போராட்டம்,வெளிநடப்பு,அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணிப்பு,விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளிநடப்பு ஆகியவற்றால் திருச்சி மாநகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

error: Content is protected !!