கேரளம் மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி மாறாமன் ரிசார்ட்டில் பணியாற்றிய திண்ஷா கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட காதலன் ஜித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். திருமணத்திற்கு மறுத்த திண்ஷா, வேறொருவருடன் நெருக்கமாக இருந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக ஜித்து கூறியுள்ளார். திண்ஷாவின் செல்போனில் மற்றொருவருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலைக்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
திருமணத்திற்கு மறுத்த பெண் கொலை – காதலன் வாக்குமூலம்
