Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரகுபதி வெற்றியை எதிர்த்த தவெக வேட்பாளர் வழக்கு நிராகரிப்பு

ரகுபதி வெற்றியை எதிர்த்த தவெக வேட்பாளர் வழக்கு நிராகரிப்பு

திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி, 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருடைய வெற்றியை எதிர்த்து, தவெக வேட்பாளர் சிந்தாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக எம்.எல்.ஏ. ரகுபதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ரகுபதியின் மனுவை ஏற்றுக்கொண்டு தவெக வேட்பாளர் சிந்தாமணியின் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே, ரகுபதியின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளரான பொன்.பன்னீர்செல்வம் என்பவர் தரப்பிலும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பொன்.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி தேர்தல் வழக்கை தாக்கல் செய்யாமல் வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்திருந்ததால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி, அந்த வழக்கையும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!