Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆண் நண்பருடன் பேசிய மனைவி வெட்டிக் கொலை – கணவர் கைது

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

குன்றத்தூர்: இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவரை கைது செய்தனர். ஆண் நண்பருடன் அடிக்கடி செல்போனில் நீண்டநேரம் பேசியதால் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சென்னை மாங்காடு அடுத்த பட்டூரை சேர்ந்தவர் முஜைதீன்(30). இவர் இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சோபியா(26). இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு 7 வயதில் மகன் உள்ளார்.

கடந்த சில தினங்களாக சோபியா அடிக்கடி செல்போனில் நீண்டநேரமாக பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதுபற்றி கணவர் கேட்டபோது மனைவி முறையான பதிலை தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. இது கணவருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்பிறகும் சோபியா யாருடனோ தொடர்ந்து செல்போனில் பேசிவந்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக தம்பதி இடையே வாக்குவாதம், பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில், நேற்றிரவும் சோபியா ஆண் ஒருவருடன் நீண்டநேரமாக செல்போனில் பேசியதால் கோபம் அடைந்த முஜைதீன் அவரை கண்டித்ததுடன் இனிமேல் செல்போனில் பேசக்கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் கோபத்துடன் சென்ற முஜைதீன், வீட்டில் வைத்திருந்த இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்துவந்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் விழுந்த சோபியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்துவிட்டார் என உறுதி செய்தபிறகு முஜைதீன் அங்கிருந்து சென்றுள்ளார்.இதனிடையே அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல்படி, மாங்காடு போலீசார் வந்து சோபியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்து விசாரித்துவந்த நிலையில், இன்று அதிகாலை மாங்காடு பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த முஜைதீனை கைது செய்தனர்.

பின்னர் அவரை மாங்காடு காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மாங்காடு பகுதியில் கடந்த 26ம் தேதி காதலிக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக யுவனேஷ்(20) என்பவர் நண்பர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பின்னர் கல்லைக்கட்டி அவரது சடலத்தை பாழுங் கிணற்றில் வீசி சென்றனர். தற்போது செல்போனில் நீண்டநேரம் பேசியதால் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நடக்கும் கொடூர சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!