Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் மேயர் அஞ்சுகம் பூபதி தலைமையில் மாநகராட்சி கூட்டம்

தஞ்சையில் மேயர் அஞ்சுகம் பூபதி தலைமையில் மாநகராட்சி கூட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் அஞ்சுகம் பூபதி தலைமையில் நடந்தது. ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி முன்னிலை வகித்தார்.

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அய்யங்குளத்தை தூர்வார வேண்டும் மேலும் அங்கு விளக்குகள் பற்றாக்குறையும் உள்ளது. இதனால் அங்கு செல்பவர்கள் தடுமாறி விழும் நிலை உள்ளது. இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெம்பார்க்கை உடன் சீரமைக்க வேண்டும். இது குறித்து ஆய்வு செய்து உடன் சரி செய்ய வேண்டும்.

31வது வார்டில் மேன்ஹோல் ஒன்றுதான் மாற்றம் செய்துள்ளனர். குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது என தெரிவித்து இருந்தோம். இதற்காக வந்து குழாய்களை சரி செய்தனர். தற்பொழுது தண்ணீர் துர்நாற்றத்துடன் வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவல் இருக்கும் நிலையில் சாக்கடை நீர் தேங்கி இருப்பதை சரி செய்ய வேண்டும். அமைக்கப்பட்ட சாலைகள் தரமற்றதாக உள்ளது. குப்பைகள் காலையில் சரியான நேரத்தில் எடுக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் குப்பைகளை சாலையில் வீசி எறிகின்றனர். எனவே தூய்மை பணியாளர்கள் காலையிலேயே குப்பைகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

error: Content is protected !!