தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் பயிற்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள கொசூர் ஊராட்சி தந்தரிபட்டி கிராமத்தை சேர்ந்த முனியப்பன் , தங்கமணி தம்பதியினர் மகள் முத்து லெட்சுமி (எ) ரம்யா என்பவர்
மயிலம்பட்டி தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் கரூர் கோவை சாலையில் உள்ள வடிவேல் நகரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி மாணவியாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாணவியின் செல் போன் பழுதடைந்ததால் உடன் தங்கி இருந்த மாணவியின் செல்போன் மூலம் தனது தந்தைனரிடம் முத்துலட்சுமி பேசியதாக கூறப்படுகிறது பின்னர் அவர்கள் ஓய்வெடுக்கும் அறிக்கை சென்றுள்ளார் இந்த நிலையில் உடன் பணியாற்றும் மாணவி ஒருவர் இரவு அறைக்கு சென்று பார்த்த பொழுது கதவு கத உள் பக்கமாக தாய்ப்பால் போடப்பட்டிருந்ததாகவும் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்த பொழுது முத்துலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முத்துலட்சுமி இறப்பிற்கு காரணம் கேட்டு கரூரில் உள்ள மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மருத்துவமனை நிர்வாகம் உரிய பதில் அளிக்காததால் அவர்கள் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்களும், உறவினர்களும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, கரூர் – கோவை சாலையில் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜராஜன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதனால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர்.
பின்னர் மாணவியின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
