சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, பயணி ஒருவரிடம் இருந்து இளைஞர் ஒருவர் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார். செல்போனை பறித்ததும், ரயிலில் இருந்து கீழே குதித்த அந்த இளைஞர் அங்கிருந்து ஓடிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஓடும் ரயிலில் பயணிகளிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் குறித்து ரயில் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு.. வாலிபர் தப்பி ஓட்டம்
