விழுப்புரம் அருகே வளவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் இரு மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதில் ‘யார் கெத்து’ என மோதல் வெடித்தது. பேருந்து நிறுத்தத்தில் ஒரு மாணவரை மற்றொரு தரப்பினர் தாக்க, பதிலுக்கு அந்த மாணவரின் ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தினர். காயமடைந்த இரு மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரீல்ஸ் தகராறில் மாணவர்கள் மோதல்- 2 பேர் காயம்-8 பேர் மீது வழக்கு
